அமைச்சர் ஹக்கீம் கடத்தப்பட்ட முஸ்லிம் இளைஞரின் வீட்டிற்கு விஜயம்




வாரியபொலையில்  நேற்றைய முன்தினம் (12) இரவு கடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகரின் மகன் மொஹமட் ஆசிக் (20 வயது) இன் வீட்டிற்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் நேற்று விஜயம் செய்தார்.
வாரியபொலை பிரதேசத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தன சந்தர்ப்பத்திலேயே குறித்த வர்த்தகரின் வீட்டிற்கு ரவூப் ஹக்கீம் விஜயம் செய்ததாக அவரின் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
இதன்போது, குறித்த கடத்தல் தொடர்பில் குருணாகல் பொலிஸ் மா அதிபரை தொடர்புகொண்ட ஹக்கீம், விசாரணைகளை விரைவாக மேற்கொள்ளுமாறும், கடத்தப்பட்ட இடத்தில் இருக்கும் ஹாட்வொரில் பொருத்தப்பட்டுள்ள CCTV கமராவை சோதனையிடுமாறும், தொலைத்தொடர்பு நிறுவனத்தின் உதவியுடன் தொலைபேசி அழைப்பு வரும் இடத்தை கண்டுபிடிக்க உதவி பெற்றுகொள்ளுமாரும் பணிப்புரை விடுத்தார்.
என்றாலும் கடத்தப்பட்ட இடத்தில் பொருத்தப்பட்டிருந்த CCTV சம்பவம் நடைபெற்ற வேலையில் “ஓப்” செயலிழக்கம் செய்யப்பட்டிருந்ததாக ஹாட்வொயார் உரிமையாளர் குறிப்பிட்டதாக கடத்தப்பட்டவரின் உறவினர்கள் அமைச்சரிடம் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக குருணாகல் மாவட்ட பொலிஸார் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றார்.