தான் இழந்த வரப்பிரசாதங்களை மீண்டும் பெற்றுக் கொள்வதற்காகவே ராஜபக்ஷாக்களின் சங்கம் அரசியலில் ஈடுபடுவதாக கல்வி அமைச்சர் அகில விராஜ்காரியவசம் தெரிவித்துள்ளார்.
ஐ.தே.கட்சியின் சிறிக்கொத்த தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
உண்மையில் மக்களுக்காக முன்னிற்பவர்கள், மக்களின் தேவைகளை சரியாக இனங்கண்டு அதற்காக குரல் கொடுக்க வேண்டும். சரியான எதிர்க் கட்சியொன்றின் கடமையும் இதுவாகும்.
இருப்பினும், மஹிந்த ராஜபக்ஷவும் அவரது கூட்டு எதிர்க் கட்சியும் ராஜபக்ஷாக்கள் பற்றியும், அவரது குடும்பத்தவர் தொடர்பிலும் மட்டுமே அலட்டிக் கொள்கின்றனர் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

