பனாமா பத்திரத்தில் ராஜபக்ஷாக்கள் இருக்கின்றனரா? –மஹிந்த கேள்வி



பனாமா பத்திரத்தில் இலங்கையர்கள் பெயர் காணப்படுவதாக கூறப்பட்டிருப்பினும், ராஜபக்ஷாக்களின் பெயர்கள் அதில் இருக்கின்றனவா? என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கேள்வி எழுப்பினார்.
நேற்று (10) வெளியான பனாமா பத்திரத்தில் இலங்கையர்கள் பெயர் வெளியாகியிருந்தன. இது குறித்து மஹிந்த ராஜபக்ஷவிடம் பனாமா கொடுக்கல் வாங்கல் தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் வினவியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
பண்டாரநாயக்க ஞாபகர்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற சர்வதேச தாதியர் தின நிகழ்வில் கலந்துகொள்வதற்கு மஹிந்த ராஜபக்ஷ வருகை தந்திருந்தார். இதன்போது ஊடகவியலாளர்கள் அவரிடம் வினாக்களைத் தொடுத்தபோது அவர் கூறிய பனாமா பத்திரம் தொடர்பாக அளித்த சுருக்கமான பதிலே இதுவாகும்.