வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில் பயணிகள் போக்குவரத்துக்கு மேலதிகமாக நிலக்கரி மற்றும் பொருட்களையும் புகையிரதத்தில் கொண்டு செல்வதற்கு புகையிர திணைக்களம் தீர்மானித்துள்ளது.
அதன்படி புகையிரதத்தின் ஊடாக பொருட்களை கொண்டு செல்வதற்கு தற்சமயம் 10 தனியார் நிறுவனங்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக புகையிரத திணைக்களம் கூறியுள்ளது.
இந்த திட்டத்தினூடாக திருகோணமலை சீன துறைமுகத்தில் இருந்து பலாவி வரை நிலக்கரி எடுத்துச் செல்வதற்கு ஒரு நிறுவனம் புகையிரத திணைக்களத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி முதலாவது நிலக்கரி எடுத்துச் செல்லும் உத்தியோகபூர்வ நிகழ்வு போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவின் தலைமையில் நாளை திருகோணமலை சீன துறைமுகத்தில் இடம்பெறவுள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் பொது வீதிச் சூழல்கள் மாசடைவதை தடுத்தல், டிப்பர் ரக வாகனங்களினால் ஏற்படும் வாகன நெரிசல்களை குறைத்தல் மற்றும் வீதி விபத்துக்களை மட்டுப்படுத்துவதற்கும் முடியும் என்று புகையிரத திணைக்களம் கூறியுள்ளது.