வீட்டுப் பணிப் பெண்ணை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டு, உயர்நீதிமன்ற முன்னாள் நீதியரசர் சரத் ஆப்ரூவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு, கொழும்பு மேல் நீதிமன்றத்தால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட போதே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
குற்றம் சுமத்தப்பட்டவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி, பிரதிவாதியால் இன்று நீதிமன்றத்திற்கு வர முடியாது போனதாகவும், எனவே வேறு தினத்தை வழங்குமாறும் கோரிக்கை விடுத்தார்.
விடயங்களை ஆராய்ந்த கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நிஷங்க பந்துல கருணாரத்ன, வழக்கு விசாரணைகளை செப்டம்பர் 14ம் திகதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.