போப் பிரான்சிஸ் இஸ்லாம் மத தலைமையோடு பேச்சுவார்த்தை



ரோமன் கத்தோலிக்க மதத் தலைவரான போப் பிரான்சிஸ் சுன்னி இஸ்லாம் மத தலைமையோடு வத்திகானில் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார்.

உலகிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட இரு மதங்களுக்கு இடையில் உறவை உருவாக்குவதற்கென நடைபெற்ற கூட்டத்தில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.


’இந்த கூட்டம் நடைபெறுவதே ஒரு வழியில் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த கூட்டம் தான் செய்தியும் கூட‘ என்று கெய்ரோவின் அல்-அஸார் மசூதியின் பெரிய இமாம் பொறுப்பிலுள்ள ஷேக் அகமது எல்-தையீப்புடன் நடைபெற்ற அரை மணிநேர கூட்டத்தின்போது போப் பிரான்சிஸ் கூறினார்.

போப் பிரான்சிசுக்கு முன்பு போப்பாக இருந்த பெனடிக்டின் கருத்துக்கள் இஸ்லாமுக்கு எதிராக அமைந்தன என்று அல்-அஸார், வத்திக்கானுடன் பேச்சுவார்த்தையை நிறுத்திய ஐந்தாண்டுகளுக்கு பிறகு இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.