விசித்திரமான களவு `கருமுட்டையை களவெடுத்தார்'



இத்தாலியில் 60 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் குழந்தைகளை பெற்றுக் கொள்வதற்கு உதவிய இத்தாலிய மகப்பேறு நிபுணர் ஒருவர், பெண் ஒருவரிடமிருந்து அவரரது ஒப்புதல் இல்லாமலேயே கருமுட்டைகளை களவு செய்த சந்தேகத்தில் கைது செய்ப்பட்டுள்ளார்.
செவரினோ அன்டினோரி என்ற இந்த மருத்துவருக்கு எதிராக, 24 வயது ஸ்பானிய பெண்மணி ஒருவர் முறைப்பாடு செய்ததை அடுத்தே இந்த கைது நடந்துள்ளது.
மிலான் நகரத்தில் இருக்கும் தனது மருத்துவமனையில் இந்தப் பெண்மணிக்கு மருத்துவர் அன்டினோரி கருப்பைக்கட்டி ஒன்றிற்கு சிகிச்சை வழங்கியிருக்கிறார்.
அந்தப் பெண்ணிடமிருந்து கருமுட்டைகளை களவெடுப்பதற்காகவே அந்தப் பெண்ணிற்கு கருப்பையில் கட்டி இருக்கிறது என கூறியிருக்கிறார் என்று கூறிய பெண்ணின் வழக்கறிஞர்கள் அவருக்கு அந்த சிகிச்சை அளித்ததற்கும் அதுவே காரணம் என்று தெரிவித்துள்ளனர்.
ஆனால் வைத்தியரின் வழக்கறிஞர்களோ இந்தக் குற்றச்சாட்டை சுத்தப்பொய் என்கிறார்கள்.