கடந்த அரசாங்கத்தின் போது மோசடியான முறையில் பெற்றுக்கொள்ளப்பட்ட பெருந்தொகை பணம் மற்றும் சொத்துக்கள் அரசாங்கத்திடம் மீளவும் ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது.
கடந்த அரசாங்கத்தின் பிரபலங்கள் அரசாங்க பணத்தை பயன்படுத்தி தங்களுக்கு நெருக்கமானவர்களின் பெயர்களில் பெற்றுக்கொள்ளப்பட்ட பில்லியன் பெறுமதியான சொத்துக்களை, அரசாங்கத்திற்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அந்த சொத்துக்களின் உரிமையாளர்கள் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக அரசாங்க தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
இதேவேளை, பல கோடிக்கணக்கான ரூபா பெறுமதியான ஹம்பாந்தோட்டை சுற்றுலா விடுதி, தெஹிவளையில் அமைந்து அதி சொகுசு மாளிகை உட்பட பல சொத்துக்களை இவ்வாறு அரசாங்கத்திற்கு வழங்க அதன் உரிமையாளர் தீர்மானித்துள்ளனர்.
கடந்த அரசாங்க பிரபலங்களின் சொத்துக்கள் தொடர்பில் பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவு, குற்ற விசாரணை திணைக்களத்தினால் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்ற விசாரணைகளுக்கு பயந்து இந்த சொத்துக்களை அரசாங்கத்திற்கு வழங்குவதற்கு இவர்கள் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதற்கமைய எதிர்வரும் வாரங்களுக்குள் இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் என கூறப்படுகின்றது.

