ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடு திரும்பியுள்ளார்.



ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடு திரும்பியுள்ளார்.
இங்கிலாந்து மற்றும் இந்திய விஜயத்தை முடித்துக்கொண்டு ஜனாதிபதி நாடு திரும்பியுள்ளார்.
முன்னதாக பிரித்தானியாவில் நடைபெற்ற ஊழல் மோசடி தவிர்ப்பு குறித்த மாநாட்டில் ஜனாதிபதி பங்கேற்றிருந்தார்.
அதன் பின்னர் இந்தியாவில் நடைபெற்ற சமய நிகழ்வு ஒன்றிலும் ஜனாதிபதி பங்கேற்றிருந்தார்.
இந்திய மற்றும் பிரித்தானிய பிரதமர்களுடனும் ஜனாதிபதி சந்திப்புக்களை நடத்தியிருந்தார்.
இந்தியாவிலிருந்து நேற்றிரவு ஜனாதிபதி நாடு திரும்பியதாக கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.