அக்கரைப்பற்று றோயல் யுத் அமைப்பின் உதவும் கரங்கள்



வெள்ளத்தில் தத்தளிக்கும் எமது உறவுகளுக்கு கைகொடுத்து உதவுவோம்.
மல்வானை லக்ஸபான பிரதேசத்து சுமார் 150 க்கும் அதிகமான குடும்பங்களைச்சேர்ந்த மக்களுக்கு உடனடியாக உணவு மற்றும் மருந்துப்பொருட்கள் தேவைப்படுகின்றது. அத்தோடு கொழும்பு வெல்லம்பிட்டி, கொலன்னாவ, வத்தள பிரதேசமும் நீரில் மூழ்கி அப்பிரதேச மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
அம்மக்களுக்கு உடனடியாக உதவிகளை அனுப்பும் பொருட்டு நிவாரண பொருட்கள் சேகரிக்கும் பணியில் எமது ரோயல் யூத்ஸ் அமைப்பினர் ஈடுபட்டுள்ளனர்.
மருந்துப் பொருட்களாக, உணவுப்பொருட்களாக, அல்லது மெழுகுவர்த்தி, நுளம்புச்சுருள், நெருப்பெட்டி போன்ற பொருட்களாக அல்லது பணமாக உங்கள் உதவிகளை வழங்கலாம். மியன்மாரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அள்ளி வழங்கிய நாங்கள் எங்கள் சொந்த சகோதரர்கள் துயரில் மூழ்கும்போது உதவாமல் இருக்கமுடியாது.
சிறுவர்கள் வயோதிபரகள் உணவுப் பொருட்களின்றி பசியோடு இருக்கும் போது நாங்கள் நிம்மதியாக உண்டு உறங்குவது எங்கள் பண்பாடு அல்ல.
மின்சாரமின்றி உண்ண உணவின்றி தூங்க இடமின்றி தண்ணீரில் தத்தளிக்கிறார்கள் எமது சகோதரர்கள்.
எனவே நாங்களும் எங்களால் முடிந்த உதவிகளை செய்து அவர்களை காப்போம்.

உதவி வழங்க விரும்புபவர்கள் உடனடியாக தொடர்புகொள்ளவும்.
அக்கரைப்பற்றில் சகோதரர் சப்னாஸ் - 
0094 754563008
அட்டாளைச்சேனையில் சகோதரர் அர்ஹம் - 
0094 774277789
கொழும்பில் அப்சான் - 
0094 750577555

ரோயல் யூத்ஸ் 
0750688183