எஸ்.எப்.பண்டார கொலையின் முக்கிய ஆதாரமான இறுவெட்டு பொலிஸார் வசம்



அண்மையில் நொச்சியாகமயில் கொலை செய்யப்பட்ட சரத் பண்டார எனப்படும் எஸ்.எப்.பண்டார கொலை தொடர்பாக இடம்பெறும் விசாரணைக்கு முக்கியமானதாக நம்பப்படும் இறுவட்டு, திரப்பனை பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
எஸ்.எப்.பண்டாரவின் சகோதரனால் இந்த இறுவட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 8 ஆம் திகதி இரவு உந்துருளியில் வந்த இரண்டு பேர், குறித்த இறுவட்டை தன்னிடம் கொடுத்து, இதனை பொலிஸாரிடம் ஒப்படைக்குமாறு கோரியதாக எஸ்.எப்.பண்டாரவின் சகோதரன் பொலிஸாருக்கு தெரிவித்துள்ளார்.(