அமெரிக்கா அணுகுண்டு வீசிய ஜப்பானின் ஹிரோஷிமா நகருக்கு அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா சென்றிருக்கிறார்.
இந்த நகருக்குச் செல்லும் முதல் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாதான்.
வருத்தத்துடன் தோன்றிய ஒபாமா 1945 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட அமெரிக்க தாக்குதலின் நினைவுச் சின்னத்திற்கு வெள்ளை மலர்களால் செய்யப்பட்ட மலர்வளையத்தை வைத்து அஞ்சலி செலுத்தினார்.
ஹிரோஷிமாவில் அணுகுண்டு வீசியது மனிதகுலம் தன்னையே அழித்து கொள்ளும் திறனை எடுத்துகாட்டியுள்ளது என்று ஒபாமா தான் ஆற்றிய உரையில் குறிப்பிட்டார்.
இரண்டாம் உலகப்போரின் கடைசி நாட்களில் நிகழ்ந்த அணுகுண்டு தாக்குதலின் விளைவாக 1,40,000 பேர் இறந்தனர்.

