பதுளை மற்றும் யாழ்ப்பாணம் செல்லும் புகையிரதங்கள் இரத்து



இன்று இரவு 8.00 மணிக்கு கொழும்பில் இருந்து பதுளை நோக்கி புறப்பட இருந்த கடுகதி தபால் புகையிரதம் இரத்து செய்யப்பட்டுள்ளது. 

அத்துடன் இன்று இரவு 8.30 மணிக்கு கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் வரை செல்ல இருந்த புகையிரதம் கல்கமுவ வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் கூறியுள்ளது. 

பலான மற்றும் இஹல்கோட்டே ஆகிய பிரதேசங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் ரயில் ஒன்று தடம் புரண்டதால் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.