மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குப்பட்ட சந்திவெளி பிரதான வீதியில் சற்று முன்னர் இடம்பெற்ற வீதி விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
முச்சக்கர வண்டியும் மோட்டார் சைக்கிளும் ஒன்றுடன் ஒன்று மோதி இவ்விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளில் பயணித்த தினேஸ் மற்றும் தினேஸ் என்ற இருவரும், முச்சக்கர வண்டியில் பயணித்த முரளி ஆகிய மூவருமே காயமடைந்து சந்திவெளி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக இருவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
குறித்த விபத்தில் முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் பலத்த சேதமடைந்து காணப்பட்டது.
ஏறாவூர் பொலிஸார் இவ்விபத்து தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

