பாராளுமன்றத்தில் அரசாங்கத்துக்கு நேற்று நெருக்கடியை கொடுத்த சம்பவத்துக்கான காரணம் தெரியவந்துள்ளது.
பாராளுமன்ற பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபாலவின் தாயார் மிலீனா சுமதிபாலவின் தயாரிப்பில் உருவாக பத்தினி திரைப்படத்தின் வெளியீட்டு நிகழ்வு நேற்று இடம்பெற்றுள்ளது. இதில், அரசாங்க தரப்பிலுள்ள பெரும்பாலானாவர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
இதனாலேயே , நேற்று பாராளுமன்றத்தில் திடீரென நடாத்தப்பட்ட குறைநிரப்புப் பிரேரணை மீதான வாக்கெடுப்பில், அரசாங்கத்துக்கு குறைவான வாக்கு கிடைக்க காரணமாகியதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

