லண்டனின் முதல் முஸ்லிம் முதல்வர் சதீக்கான்



லண்டன் மேயர் தேர்தலில் சதீக்கானின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது. இது வரை எண்ணப்பட்ட 99.9% மான உத்தியோக பூர்வ வாக்குகளின் அடிப்படையில் தொழிலாளர் கட்சி வேட்பாளர் முன்னிலையில் உள்ளார்.
சதீக்கான் முதலாவது சுற்று வாக்கு எண்ணிக்கையில் 44% மான வாக்குகளைப் பெற்று முன்னணியில் உள்ளார். இதேவேளை கொன்சவேட்டிவ் கட்சியின் மேயர் வேட்பாளர் சக் கோல்ட் ஸ்மித் 35%மான வாக்குகளையே பெற்றுள்ளார்.
ஏனைய கட்சிகளான கிறீன் கட்சி 6.0% வாக்குகளையும் லிபரல் ஜனநாயக் கட்சி 5.0% வாக்குகளையும் UKIPயுகிப் 4.0%மான வாக்குகளையும் பெற்றுள்ளன.
லண்டன் மேயர் தேர்தலில் போட்டியிட்டுள்ள 12 வேட்பாளர்களுள் அதிக வாக்குகளை பெற்றுள்ள தொழிலாளர் கட்சி வேட்பாளர் சதீக்கான் மேயராவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.