அதிபர் சேவைக்கு 3,859 பேர் இணைப்பு



இலங்கை அதிபர் சேவை III ஆம் வகுப்பில் காணப்படும் வெற்றிடங்களை நிரப்புவதற்கு 3,859 பேர் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.
தெரிவு செய்யப்பட அதிகாரிகளின் பெயர் விபரங்கள் www.moe.gov.lk எனும் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த அதிகாரிகளுக்கு சேவைக்கு முன்னரான பயிற்சி நாட்டின் எல்லா பகுதிகளிலும் மே மாதம் 09ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன், 06 வாரங்களுக்கு இந்த பயிற்சி வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது