சாய்ந்தமருது வீடொன்றின் மீது டப்பி தாக்குதல்





கல்முனை சாய்ந்தமருது பிரதேசத்தில் அரச வர்த்தக கூட்டுத்தாபன தலைவரும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பிரதி தலைவருமான ஏ.எம்.ஜெமீலின் பிரத்தியோக பாதுகாப்பு உத்தியோகத்தர் வீட்டின் மீது இனம்தெரியாதோரினால் டப்பி என்று அழைக்கப்படும் உள்ளூர் தயாரிப்பு குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

நேற்று வெள்ளிக்கிழமை (20) நள்ளிரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

இதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதுடன் வீட்டின் கதவு சேதமடைந்துள்ளது என கல்முனை பொலிசார் தெரிவித்தனர். 

சாய்ந்தமருது குவாட்டஸ் வீதியிலுள்ள குறித்த வீட்டின் மீது சம்பவ தினமான நள்ளிரவு 2.45 மணியளவில எஸ்லோன்பைப்பில் வெடிமருந்து நிரப்பப்பட்டு தயாரிக்கப்பட்ட டப்பி என்று அழைக்கப்படும் உள்ளுர் தயாரிப்பு குண்டு தாக்குதல் இனம்தெரியாதோரினால் நடாத்தப்பட்டுள்ளது. 

இதன்போது பாதுகாப்பு உத்தியோகத்தரின் தந்தையார் படுகாயமடைந்துள்ள நிலையில் கல்முனை அஷ்ரப் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இச் சம்பவம் தொடர்பாக கல்முனை பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

(அத தெரண நிரூபர்)