சட்டவிரோத இரத்தினக் கல் அகழ்வுகளை சுற்றிவளைக்க நடவடிக்கை



அனுமதியின்றி இரத்தினக் கல் அகழ்வில் ஈடுபடுவோரை சுற்றி வளைப்பதற்கு பொலிஸ் மா அதிபரின் கீழ் விஷேட பொலிஸ் குழுவொன்றை நியமிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பனிப்புரை விடுத்துள்ளார். 

பாரியளவில் சுற்றாடலுக்கு விளைவித்துக் கொண்டு அனுமதியின்றி இரத்தினக் கல் அகழ்வில் ஈடுபடுவோருக்கு எதிராக தராதரம் பார்க்காது சட்டத்தை கடைபிடிக்குமாறு ஜனாதிபதி கூறியுள்ளார். 

மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதியின் தலைமையில் புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தின் முன்னேற்ற ஆய்வு கூட்டம் இன்று (06) இடம்பெற்றது. 

இதன்போது ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளதுடன், அனுமதியின்றிய இரத்தினக் கல் அகழ்வு சம்பந்தமாக இங்கு கூடிய அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. 

கடலுடன் தொடர்புடைய அனைத்து வளங்களினதும் உரிமை சம்பந்தமாக செயற்படுவதற்கு அதிகாரமுள்ள நிறுவனம் ஒன்றை ஸ்தாபிப்பது குறித்தும் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.