அக்கரைப்பற்று "தகாபுல் நிதியம்" உதயம்



”தகாபுல் நிதியம் பிறக்கின்றது.வட்டி இன்றுடன் இறக்கின்றது” என்ற தொனிப்பொருளில், அக்கரைப்பற்று ஜீம்ஆ பெரிய பள்ளிவாயலை மையமாகக் கொண்டு தகாபுல் நிதியம் உருவாக்கப்பட்டுள்ளது.இஸ்லாமிய சரீஆ  வழிகாட்டலில் இன்று உதயமான இத்திட்டத்தின் நோக்கம் மிகவும் வசதி குறைந்த மக்களுக்கு வட்டியற்ற முறையில் கடன் வழங்குவது, சேமிப்பை ஊக்கப்படுத்துவது, முதலீடுகளை மேற்கொள்வது என்ற பரந்து பட்ட நோக்கத்தில் நெறிப்படுத்தப்பட்டுள்ளது என அதன் பொருளாளர், அஸ்ஸெய்க் அக்றம் நளீமி இன்று தெரிவித்தார்.இதன் தலைவராக எம்.எம்.எம்.றிசாம் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதுடன் அக்கரைப்பற்று ஜம்இய்யத்துல் உலமா இதற்கான வழிகாட்டல்களையும் வழங்கவுள்ளது.

எந்தவொரு நபரும் 1000 ரூபாவினை வைப்பிலிடுவதன் மூலம், இதன் அங்கத்தவராகமுடியும் என்பதுடன் 50 000 ரூபா வரையிலான கடன்களையும் அவர் பெற்றுக் கொள்ளவும் முடியும்.

இன்று மாலை இடம்பெற்ற நிகழ்வில், புத்திஜீவிகள், உலமாக்கள்,தனவந்தர்கள், சட்டத்தரணிகள், பள்ளிவாயல்களின் நம்பிக்கையாளர்கள்  உட்பட பொதுமக்களும் கலந்து சிறப்பித்தனா்.