நாட்டில் நிலவுகின்ற சீரற்ற வானிலை காரணமாக, இதுவரையிலும் இருவர் மரணமடைந்துள்ளனர், நால்வரைக் காணவில்லை மற்றும் 1,871 குடும்பங்களைச் சேர்ந்த 7,090 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று, அனர்த்த முகாமைத்துவ மத்தியநிலையம் அறிவித்துள்ளது.
இலங்கையைச் சுற்றியுள்ள வளிமண்டலத்தில் ஏற்பட்டிருந்த கொந்தளிப்பின் இயல்பு, குறைந்த அழுத்த மண்டல வலயம் வரையிலும் வியாபித்தமையால், நாட்டில் சீரற்ற வானிலையின் நிலைமை மிகமோசமாக மாறியுள்ளது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 முதல் மாலை 5.30 வரையிலான காலப்பகுதிக்குள், அதிகூடிய மழைவீழ்ச்சியாக கட்டுநாயக்கவில் 137.7 மில்லிமீற்றரும், திருகோணமலையில், 125.7 மில்லிமீற்றரும், குருநாகலில் 117.2 மில்லிமீற்றரும் கொழும்பில் 106.9 மில்லிமீற்றரும் பதிவாகியுள்ளது.
குறைந்தளவான மழைவீழ்ச்சி யாழ்ப்பாணத்திலேயே பதிவாகியுள்ளது. அங்கு 1.7 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியே பதிவாகியுள்ளது.
இதேவேளை, இன்று திங்கட்கிழமை, 150 மில்லிமீற்றர் மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் தென்படுவதாக இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

