நாடளாவிய ரீதியில் பாடசாலை மாணவர்களை தேசிய நல்லிணக்கம் சம்பந்தமாக அறிவூட்டும் தேசிய வேலைத் திட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றது.
“மாணவர் வாழ்க்கைக்கு புதிய அர்த்தம்” என்ற தொனிப் பொருளில் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று பிற்பகல் இந்த இடம்பெற்றது.
இதன்போது திறமைகளை வெளிப்படுத்திய மாணவ மாணவிகளுக்கு ஜனாதிபதியினால் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டதுடன் தேசிய ஒருமைப்பாட்டு மற்றும் நல்லிணக்க அமைச்சு இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது.

