(தகவலும் படமும் சாஜில்)
காத்தான்குடி ஜாமியுள்ளாபிரின் சந்தைத்தொகுதியில் 3 கடைகள் தீப்பற்றியுள்ளது.
இன்று (17) வெள்ளிக்கிழமை சந்தையில் வியாபாரத்தினை முடித்துக்கொண்டு ஜூம்ஆவுக்கு செல்லும் வேளை இவ்வாறு கடைத்தொகுதியில் தீப்பற்றி எரிந்ததை கண்டவர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே உரிமையாளர் கடைத்தொகுதிக்கு விரைந்து பொது மக்களின் உதவியுடன் தீயணைப்பில் ஈடுபட்டதாகவும் அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர்.
இதன்போது பெருமளவிலான பொருட்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இத் தீ விபத்து மின் ஒழுக்கு காரணமாக இடம்பெற்றிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் சம்பவ இடத்திற்கு விரைந்த காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஆரிய பந்து வெதகதர தலைமையிலான பொலிஸ் குழுவினர் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்


Post a Comment
Post a Comment