காத்தான்குடி: ஆசிரியை தாக்குதல். மாணவன் வைத்தியசாலையில்



(FILE PHOTO)
காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள காத்தான்குடி பாடசாலையொன்றில் மாணவர் ஒருவரை ஆசிரியை ஒருவர் இன்று (11) சனிக்கிழமை தாக்கியதில் மாணவர் காயங்களுடன் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காத்தான்குடி மெத்தைப்பள்ளி வித்தியாலயத்தில் ஐந்தாம் வகுப்பில் கல்வி கற்கும் மாணவரான சாஹீர் றஹ்மான்(10) எனும் மாணவரே இவ்வாறு ஆசிரியையினால் தாக்கப்பட்டுள்ளார்.
குறித்த பாசடாலையில் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையை இவ்வாண்டு எழுதும் மாணவர்களுக்காக பிரத்தியேக வகுப்பை நடாத்திக் கொண்டிருந்தபோதே இந்த ஆசிரியை குறித்த மாணவரை தாக்கியுள்ளார்.
தாக்கப்பட்ட மாணவர் காயங்களுடன் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பில் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
காத்தான்குடி பொலிசார் இது தொடர்பாக விசாரணைகளை நடாத்தி வருவதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.