மேல் மகாண 5 வது மாட்சிமை பொருந்திய ஆளுனரும், ஊடகத் துறை முன்னாள் பிரதி அமைச்சரும், உள்நாட்டு அலுவல்கள், தொழில் உறவுகள் முன்னாள் அமைச்சருமான அஸ்ஸெய்யித் அலவி மௌலானா இன்று தனது 84 வயதில் காலமானார்.
1932 ல் ஜனுவரி 1ல் பிறந்த அலவி மௌலானா சாஹிராக் கல்லுாரி, சென் பீற்றர்ஸ் கல்லுாரியில் பழைய மாணவர்.1948 முதல் தொழிற் சங்கவாதியாக தன்னை அடையாளப்படுத்தினார். 1956 ஆம் ஆண்டில் (SLFP) இல் இணைந்த இவர் பண்டாரநாயக்க குடும்பத்துடன் நெருங்கிய உறவும் கொண்டிருந்தார். மேல் மகாண முதலமைச்சராக சந்திக்கா பண்டாரநாயக்க வருவதற்கு அரும் பாடுபட்டார்.
1994ல்தேசியப் பட்டியல் மூலம் சந்திரிக்கா தலைமையிலான அரசில் பாராளுமன்ற அங்கத்துவத்தைப் பெற்ற இவர், 1994ல் ஊடகத் துறைப் பிரதி அமைச்சராகப் பணியேற்றார்.இலங்கை வானொலி முஸ்லிம் சேவையின் காலை வேளை ஒலிபரப்பினை 8.30-10.30 வரை நீடிக்கச் செய்ததுடன் தமிழ் ஒலிபரப்பின் வளர்ச்சிக்கென பல அதிகாரிகளையும் நியமி்த்தார். காத்தான்குடி நகர சபை ஆனது இவரது அமைச்சரவைக்கு அன்று சமர்ப்பித்த பத்திரத்தின் மூலமே.
உள்ளுராட்சி அமைச்சராகவும், தொழிலமைச்சராகவும் பணி புரிந்த இவர்,மேல் மாகாணத்தின் 5 வது ஆளுனராக, மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் 2002-2015 வரை இன மதம் பாரமல் சேவையாற்றி இளைப்பாறியவர்.
விடுதலைப் புலிகள் மேதினத்தன்று நடத்திய தாக்குதலில் சந்திரிக்கா அம்மையாருடன் அருகில் நின்ற இவர் காயங்களுக்கும் உள்ளானார்

வைகறைத் தொழுகையுடன் தனது கடமைகளைச் செய்ய ஆரம்பிக்கும் ஒரு அபுர்வ அரசியல்வாதி. எவர் சென்றாலும் அவர்களுக்கு தன்னால் முடியுமானதைச் செய்து கொடுக்கும் பெருந்தகை.
விடுதலைப் புலிகள் மேதினத்தன்று நடத்திய தாக்குதலில் சந்திரிக்கா அம்மையாருடன் அருகில் நின்ற இவர் காயங்களுக்கும் உள்ளானார்.
யுத்தகாலத்தில்கூட தனது பாதுகாப்புக்கு இறைவனே துணை என்று தனித்துப் பிரயானித்த யாசகன். கட்சி விட்டுக் கட்சி மாறும் இன்றைய வங்குரோத்து அரசியல் வாதிகளுக்கு மத்தியில் கொண்ட கொள்ளையில் நிலைத்த கொள்கைவாதி.தனது சொந்த குடும்ப அங்கத்தவர்களை தொழிற் சங்கத்தில் நின்றதற்காக இழந்தவர்.மருதானை போபஸ் வீதியில் உள்ள சொந்த நில புலத்தினை அரசியலுக்காக அர்ப்பணித்தார்.
நேரத்துக்கு இயங்கும் நாணயம்மிக்க மனிதர். வானொலி,தொலைக்காட்சிப் பேட்டியெனில், வேளைக்கு முன்னரே வந்து கலந்து கொள்ளும் கணவான்.மும்மொழிப் புலமைப் பேச்சாளனான இவர் ஆங்கில் மொழியில் சிலேடைகளின் சொந்தக்காரர்.
மே தினத்தினை தவிர, ஏனைய நாட்களில் வெண்னிற ஆடையுடன் திகழும் இவர் அமைச்சர், ஆளுனர் என்ற அகங்காரங்கள் அற்று எளிமையின் சிகரமாகத் திகழ்ந்தவர்.
எல்லாம் வல்ல இறைவன் சங்கை மிகு ரமழானில் இவரது உயிரைக் கைப்பற்றியுள்ளான்.தனது நல்லடியடியார்களின்கூட்டத்தில் இவரையும் சேர்த்து வைப்பானாக! ஆமீன்
CEYLON24 இணையத் தளம் இவரது பிரிவால் வாடும் குடும்ப உறவுகளுக்கு தனது அனுதாபங்களைத் தெரிவிக்கின்றது.

Post a Comment
Post a Comment