தீர்வை வரி அற்ற வாகனங்களுக்கு எதிராக அடிப்படை உரிமை மனு



பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தீர்வை வரி அற்ற வாகனங்கள் வழங்கும் தீர்மானத்தை இடைநிறுத்துமாறு உத்தரவு பிறப்பிக்குமாறு உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குறித்த மனுவில் பிரதிவாதிகளாக சட்டமா அதிபர் ஊடாக ஜனாதிபதி, நிதி அமைச்சர் உள்ளிட்ட நால்வர் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
குறித்த மனுவை சட்டத்தரணி ஒருவர் தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.