#இலங்கை சிறுவர் தொழிலாளிகளற்ற வலயம்



சர்வதேச சிறுவர் தொழிலாளர் எதிர்ப்பு தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று நடைபெற்றது.
”சிறுவர்களைத் தொழிலில் ஈடுபடுத்துவதை முடிவுக்குக் கொண்டு வருவோம்” என்ற தொனிப்பொருளில் இன்றைய தினம் நினைவுகூரப்பட்டது.
சர்வதேச சிறுவர் தொழிலாளர் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் இந்த வைபவம் நடைபெற்றது.
அமைச்சர்கள் பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டிருந்தனர்.
இதேவேளை, சர்வதேச தொழிலாளர் அமைப்பின் இலங்கை மற்றும் மாலைத்தீவிற்கான பணிப்பாளர் டொன்க்லீன் லீ இலங்கையை சிறுவர் தொழிலாளிகளற்ற வலயமாக மாற்றுவதற்கான பிரகடனத்தை ஜனாதிபதியிடம் கையளித்ததுடன் பின்னர் அதில் கைச்சாத்திடப்பட்டது.
இலங்கையை சிறுவர் தொழிலாளிகளற்ற வலயமாக மாற்றுவதற்கான பிரகடனத்தை குறுந்தகவல் ஊடாக மக்களுக்கு அனுப்பி வைக்கும் செயற்பாட்டை ஜனாதிபதி இதன்போது ஆரம்பித்து வைத்தார்.#Anti Child labour #Lka