சில தனியார் தொலைக்காட்சி ஊடகங்களிலும் தனியார் வானொலி ஊடகங்களிலும் 80 வீதமான நேரத்தை அரசாங்கத்தை விமர்சிப்பதற்கே எடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றம்சாட்டினார்.
நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கை மற்றும் அரசாங்கத்தின் கொள்கைகள் தொடர்பில் மக்கள் அறிவுட்ட 20 நிமிட நேரம் மாத்திரமே ஒதுக்கப்படுகின்றது.
தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவிற்கு ஜனாதிபதி நேற்று விஜயம் செய்த அதன் அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இதனைக் குறிப்பிட்டார்.
இதற்காக ஊடகங்களைக் கட்டுப்படுத்துவதற்கு நான் சொல்லவில்லை. அரசாங்கத்தின் தகவல்கள் அவர்களைப் போய்ச் சேருவதற்கு சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுங்கள். விமர்ஷனங்கள் ஆக்கபுர்வமானதாக இருக்கட்டும் எனவும் ஜனாதிபதி மேலும் கூறினார்.

