பசிலை மீண்டும் கட்சிக்குள் கொண்டுவந்தது மஹிந்த செய்த தவறு



மஹிந்த ராஜபக்ஷ தெரிந்தோ தெரியாமலோ மக்களால் புறக்கணிக்கப்பட்ட ஒருவரை மீண்டும் கட்சியில் பொறுப்பான பதவிக்கு தெரிவு செய்துள்ளார் என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் டிலான் பெரேரா தெரிவித்தார்.
கூட்டு எதிர்க் கட்சியினர் நயவஞ்சகத்தனமான ஒரு போக்கையே கையாள்கின்றது. ஸ்ரீ ல.சு.கட்சியை உடைப்பதற்கு மேற்கொள்ளும் மற்றுமொரு நடவடிக்கையே இந்த நிழல் அமைச்சரவைக்கான நடவடிக்கை  எனவும் அவர் மேலும் கூறினார்.