அரச சட்டத்தரணி ஆஜராகவில்லை.மாணவர்களுக்குப் பிணை இல்லை



பகிடிவதை சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள களனி பல்கலைக்கழக மாணவர்கள் 8பேருக்கு பிணை வழங்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

குறித்த மாணவர்களின் பிணை மனுவை நிராகரித்த கம்பஹா மேல் நீதிமன்ற நீதிபதி பிரேமா ஸ்வர்ணாதிபதி, குறித்த மனு மீதான விசாரணையை ஓகஸ்ட் மாதம் 1ஆம் திகதிக்கு தள்ளிவைத்தார்.

அரச சட்டத்தரணிகள் மன்றில் ஆஜராகாதமை காரணமாக இந்த குறித்த பிணை மனு நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.