அம்பாறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நவகிரியாவக் குளத்துக்கு அருகாமை நின்ற இரண்டு ஓடங்கள், நேற்றுத் திங்கட்கிழமை (18) நள்ளிரவு 12 மணியளவில், இனந்தெரியாத நபர்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.
மாடுகளை விரட்டுவதற்காகச் சென்ற இரண்டு இளைஞர்களே, மீனவர்களின் ஓடங்கள் தீக்கிரையாக்கப்படுவதைக் கண்டு, மீனவத்தலைவரிடம் கூறியதாக மீனவத்தலைவர் பொலிஸில் வாக்குமூலம் வழங்கியுள்ளார். இரண்டு ஓடங்களும் முற்றாகத் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாகவும் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். (படப்பிடிப்பு - வசந்த சந்திரபால)

