சர்ச்சைக்குரிய நடிகை #குவாண்டீல் பலூச், கொலை



சமூக வலைத்தளங்களில் அதிரடி தகவல்கள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிட்டு பிரபலமான, சர்ச்சைக்குரிய நடிகை குவாண்டீல் பலூச், அவரது சகோதரரால் ஆணவக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
பாகிஸ்தானைச் சேர்ந்த குவாண்டீல் பலூச் (26) பவுசியா அஷீம் எனும் இயற்பெயரைக் கொண்டவர். தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வந்ததோடு மாடலிங்கிலும் ஈடுபட்டு வந்தார்.
மாடலிங் தொழிலை விட சமூக வலைத்தளங்களில் இவர் வெளியிட்டு வந்து வீடியோக்கள், புகைப்படங்களே இவரை பிரபலமாக்கியது.
பாகிஸ்தானின் எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான் கானை திருமணம் செய்து கொள்வது தொடர்பாக அவர் கூறிய கருத்துக்கள் மிகப்பெரிய சர்ச்சையைக் கிளப்பின.
மன்மோகன் சிங், தோனி, கோலி ஆகியோர் பற்றியும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை இவர் தெரிவித்திருந்தார்.
இவர் பேஸ்புக்கில் இதுபோன்ற புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவது அவரது சகோதரருக்குப் பெரும் கோபத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து இதுபோன்ற புகைப்படங்களையும், வீடியோக்களையும் சமூக வலைத்தளங்களில் வெளியிடாதே என்று அவரது சகோதரர் பலமுறை எச்சரிக்கை விடுத்தார். ஆனால் குவாண்டீல் அதனைக் கண்டுக்கொள்ளவில்லை.
இதற்கிடையே மூன்று வாரங்களுக்கு முன்னதாக தனது உயிருக்கு ஆபத்து உள்ளதாகவும், பாதுகாப்பு அளிக்குமாறும் பொலிஸாரிடம் குவாண்டீல் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்நிலையில்தான் வெள்ளிக்கிழமை இரவு அவர் தனது வீட்டில் கழுத்தை நெரித்துக் கொல்லப்பட்டுள்ளார்.
வாசிம் என்னும் அவரது சகோதரர்தான் இந்தக் கொலையை செய்திருப்பதாகவும், அவர் தபபி ஓடி விட்டதாகவும் தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.