நீர் வெட்டு




கலட்டுவாவ நீர் சுத்திகரிப்பு நிலையத்தை நவீனமயமாக்கல் காரணமாக கொழும்பை அண்மித்த சில பகுதிகளில் நாளை நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக, தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. 

நாளை நண்பகல் 12.00 மணி முதல் இரவு 12.00 மணி வரையான 12 மணித்தியாலங்கள் இவ்வாறு நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளது. 

அதன்படி, மகரகம, பொரலஸ்கமுவ, கொட்டாவ, பன்னிபிட்டிய, ஹோமாகம, ருக்மல்கம, பெலவத்தை, மத்தேகொட, கொடகம, மீபே, ஹன்வெல்ல, கலுஅக்கல மற்றும் பாதுக்க ஆகிய பிரதேசங்களில் இவ்வாறு நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளது. 

இதுதவிர, குறித்த காலப்பகுதியில் கடுவல பிரதேசத்திற்கு குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் மேற்கொள்ளப்படும் என்றும் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.