#ஜேர்மனி : பதற்றம், துப்பாக்கிச் சண்டை



ஜேர்மனியின் முனிஷ் நகரில் உள்ள பிரபல வர்த்தக கட்டிடத் தொகுதியில் தற்போது துப்பாக்கிச் சூடுகள் இடம்பெற்றுக் கொண்டிருப்பதாக வௌிநாட்டு செய்திகள் கூறுகின்றன. 

தற்போது அங்கு காவற் துறையினர் விரைந்துள்ளதுடன், அவர்களும் பதில் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டுள்ளனர். 

சம்பவத்தின் பாதிப்புக்கள் குறித்து இதுவரை எந்தவித தகவல்களும் வௌியிட முடியவில்லை என்று முனிஷ் பொலிஸார் கூறியுள்ளனர். 

அந்தப் பகுதி மக்களை விழிப்பாக இருக்குமாறு பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.