நீர் வெட்டு



சில பிரதேசங்களில் நாளை காலை 8 மணி முதல் மாலை 6.30 வரை பத்தரை மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர்வழங்கல், வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
இலங்கை மின்சார சபையினால் மேற்கொள்ளப்படவுள்ள திருத்த வேலைகள் காரணமாக நீர் விநியோகம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வாதுவை, வஸ்கடுவ, பொத்துபிட்டிய, மொரன்துடுவ, களுத்துறை வடக்கு மற்றும் தெற்கு, கட்டுகுருந்த, நாகொட, பெந்தோட்டை, பயாகல, போம்புவல, மக்கோன, பேருவலை, களுவா மோதரை, மொரகல்ல, தர்கா நகர், அளுத்கம மற்றும் பிலமினாவத்தை ஆகிய பகுதிகளுக்கான நீர் விநியோகம் நாளை இடைநிறுத்தப்படவுள்ளது.