(க.கிஷாந்தன்)
கந்தபளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கந்தபளை கோட்லோஜ் பகுதியில் மரை இறைச்சி கொண்டு சென்ற குற்றச்சாட்டின் பேரில் நபர் ஒருவரை 20.07.2016 அன்று புதன்கிழமை கந்தபளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் குறித்த சந்தேக நபர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்த சந்தேக நபரை 21.07.2016 அன்று வியாழக்கிழமை நுவரெலியா நீதிமன்றில் ஆஜர்செய்ய நடவடிக்கைகள் எடுத்துள்ளதாக கந்தபளை பொலிஸார் தெரிவித்தனர்.

