(இஸ்மாயில் உவைசுர் ரஹ்மான்)
முன்னாள் மாவட்ட நீதிபதியும், நீதவானும், மட்டக்களப்பு சட்டத்தரணிகள் சங்க சிரேஸ்ட சட்டத்தரணியுமான கே. தட்சனாமூர்த்தி இன்று காலமானார்.
கல்முனை கார்மேல் பாத்திமாக் கல்லூரியின் பழைய மாணவரான இவர் கிறிக்கட் விளையாட்டில் அதிக ஆர்வம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆரம்பத்தில் வன பரிபாலன அதிகாரி மற்றும் பிராந்திய வன பரிபாலன அதிகாரியாக பதவி வகித்து பின்பு சட்டக்கல்லூரியில் பட்டம் பெற்று சட்டத்தரணியாகக் கடமையாற்றினார்.
தொழில் நீதி மன்றத்தின் தலைவராக மட்டக்களப்பு, நுவரெலியா போன்ற இடங்களில் கடமை புரிந்ததோடு நீதவான் நீதிமன்ற நீதிபதியாகவும் பின்பு மாவட்ட நீதிபதியாக மட்டக்களப்பு, கல்முனை, அக்கரைப்பற்று, வவுனியா மற்றும் திருகோணமலை ஆகிய இடங்களில் கடமையாற்றி ஓய்வு பெற்றார்.
பின்பு கிழக்குப் பல்கலைக் கழகம் மற்றும் மட்டக்களப்பு மனித உரிமைகள் இல்லத்தில் சட்ட ஆலோசகராகக் கடமையாற்றியதோடு மீண்டும் சட்டத்தரணியாகவும் பணிபுரிந்தார்.
.
இவர், சட்டத்தரணி நிஸாந்தியின் தந்தையும், மல்லாகம் நீதிமன்ற நீதவான் கருனாகரனின் சித்தப்பபாவுமாவார்.
இவரது பூதவுடல் நல்லடக்கத்திற்காக நாளை வியாழக்கிழமை (21) பி;ப. 4.00 மணிக்கு கள்ளியங்காடு இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவரது ஆத்ம சாந்திக்காக பிரார்திக்கின்றோம்

