(க.கிஷாந்தன்)
மஸ்கெலியா புனித ஜோசப் கல்லூரியின் 1990ஆம் ஆண்டில் க.பொ.த. சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றிய பழைய மாணவர்களின் ஏற்பாட்டில் ஒன்று கூடல் 09.07.2016 அன்று மேற்படி கல்லூரியின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.
இவ்வொன்று கூடலில் சிறப்பம்சமாக 1990களில் கற்பித்த அதிபர்கள், சக ஆசிரியர்கள் அகியோர் பாராட்டி பரிசில்கள் வழங்கி, பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் ஏற்பாட்டுக் குழு தலைவர் திரு. ஆர்.பிரான்ஸிஸ், செயலாளர் டி.தயாநந்தன், பொருளாளர் எம்.சதாசிவம் மற்றும் ஒருங்கிணைப்பாளர் எஸ்.தினேஷ்குமார், அதிபர்கள், ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
அத்தோடு மேற்படி பழைய மாணவர்களினால் பாடசாலையின் அபிவிருத்திக்காக ஒரு இலட்சம் ரூபா காசோலையும் பாடசாலையின் அதிபரிடம் கையளிக்கப்பட்டமையும் குறிப்பிடதக்கது

