திருட்டு வழியில் வரி பெறச் சென்று கிடைத்ததும் இல்லாது போயுள்ளது!




திருட்டு வழியில் வரி பெறச் சென்று, அரசாங்கத்திற்கு கிடைத்த வரியும் இல்லாது போயுள்ளதாக, பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார். 

இவர்கள் நாட்டின் சட்டம் அல்லது அரச நிர்வாகம் குறித்து "அ" அல்லது "ஆ" கூட தெரியாதவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். 

இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே விமல் வீரவங்ச இவ்வாறு கருத்து வௌியிட்டுள்ளார். 

ஆரம்பத்திலேயே இந்த சட்டமூலம் நீதிமன்றத்தினால் பலமற்றதாக ஆக்கப்பட்டதாகவும், பின்னர் பொய்யாக மற்றுமொரு சட்ட மூலத்தை கொண்டு வரவுள்ளதாகவும், அதற்கும் அமைச்சரவை அனுமதி கிடைக்கப் பெறாது எனவும் விமல் வீரவங்ச சுட்டிக்காட்டியுள்ளார்.