அவுஸ்திரேலியாவுடனான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாள் முடியும் தருவாயில் இலங்கை அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 355 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
இலங்கை அணிக்காக துடுப்பெடுத்தாடிய தினேஷ் சந்திமால் 132 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார். தனஞ்சய டி சில்வா 129 ஓட்டங்களைப் பெற்றார். 33 ஓட்டங்கள் பெற்ற நிலையில் ரங்கன ஹேரத் உபாதையொன்றின் காரணமாக மைதானத்தை விட்டும் நீங்கிச் சென்றார்.
பந்து வீச்சில் மிச்சென் ஸ்டர்க் 63 ஓட்டங்களைக் கொடுத்து 5 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்.
தற்பொழுது அவுஸ்திரேலிய அணி துடுப்பெடுத்தாடிக் கொண்டிருக்கின்றது

