5ம் தர புலமைப் பரிசில் முன்னோடிக் கருத்தரங்கு



(சுஹைப் உமறுலெப்பை)

சிரேஷ்ட ஊடகவியலாளரும், சட்டத்தரணியுமான இஸ்மாயில் உ வைசுர் ரஹ்மானின்   வேண்டு கோளின் பேரில், ADSSO அம்பாரை மாவட்ட சமூக சேவைகள் அமைப்பின் ஏற்பாட்டில், 5 புலமைப் பரிசில் பரீட்சைக்கான இலவச முன்னோடிக் கருத்தரங்கு இன்று இடம்பெற்றது.   அக்கரைப்பற்று வலயப் பாடசாலை மாணவர்கள் பயன் பெறும் வகையில் - 2016 இவ்வருடம் தரம் - 05 புலமைப் பரிசில் பரீட்சை எழுதும் மாணவ, மாணவியர்களின் நலன்கருதி, அக்கரைப்பற்று மாநகர அதாஉல்லாஹ் அரங்கிலே,இன்று  ஞாயிற்றுக் கிழமை முற்பகல் 08.30 மணிக்கு ஆரம்பமாகி பிற்பகல் 02.30 மணி வரை, பாடசாலை மாணவர்களின் ஒன்றுகூடலுடன் ஆரம்பமாகி இனிதே நடை பெற்றது.
இலவசக் கருத்தரங்கிற்கு ADSSO அமைப்பின் தலைவரும், அதிபரும், ஊடகவியலாளரும், கல்வியலாளருமான .A.R.M.ஜிப்ரி வளவாளராகக் கலந்து விரிவுரைகளை  வழங்கினார்.நபீல் பௌன்டேசன் நிறுவனம் அணுசரணை வழங்கியது.