(சயன்தன்-BATTI NEWS)
தம்பட்டையில் தென்னை மரம் முறிந்ததில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் .
விநாயகபுரம் கப்புகனார் வீதியை சேர்ந்த வயதுடைய சிவகுமார் வினோஜன் என்பவரே இவ்வார் உயிரிழந்துள்ளார்
ஆட்டோவில் விநாயகபுரம் இருந்து அக்கரைப்பற்று நோக்கி நான்கு பேர் சென்று கொண்டிருந்தபோது பலத்த காற்று வீசியதில் வீதி அருகே இருந்த தென்னை மரம் ஆட்டோ மீது விழுந்ததில் இவ் விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது .
ஒருவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதுடன் மற்றைய இருவரும் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

