((சதீஸ்))
மட்டக்களப்பில் இருந்து கொழும்புக்குச் செல்லும் தனியார் பஸ் வண்டிக்கு வீதிக்கான வீதி அனுமதிப் பத்திரம் இல்லாமல் பயணிகளை ஏற்றிச் சென்றதனால், அதனால் பாதிக்கப்பட்ட பஸ் வண்டி உரிமையாளர்கள் குறித்த பஸ் வண்டியை வழிமறித்து பயணத்தை தடுத்து நிறுத்திய சம்பவம் வௌ்ளிக்கிழமை 12ஆம் திகதி இரவு 8 மணியளவில் மட்டக்களப்பு நகரில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு - கொழும்பு வீதிக்கான வீதி(போக்குவரத்து) அனுமதிப் பத்திரம் இல்லாமல் பயணிகளை ஏற்றுவது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எழுத்து மூலம் தெரிவித்தும் தமக்கு சாதகமான பலன் கிடைக்கவில்லை அதனால் இன்றையதினம் சம்பந்தப்பட்ட தனியார் பஸ்வண்டியை வழி மறித்து பொலிஸாரை வரவழைத்தோம் என பாதிக்கப்பட்ட தனியார் பஸ் வண்டி உரிமையாளர்களும், நடத்துனர்களும் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு - கொழும்பு வீதிக்கான வீதி அனுமதிப் பத்திரம் இல்லாமல் கடந்த பல நாட்களாக பயணிகளை ஏற்றிச் செல்வதால், அரசாங்கத்துக்கு பணம் செலுத்தி வீதி அனுமதிப் பத்திரம் பெற்றுக்கொண்டு பயணிகளை ஏற்றும் பஸ் வண்டி சாரதி மற்றும் அதன் உரிமையாளர்கள் தங்களுக்கு இலாபம் இல்லாமல் தொழில் புரிவதாக இதன்போது தெரிவிக்கின்றனர்.
இச் சம்பவத்தின்போது சிறிது நேரம் பதற்றநிலை ஏற்பட்டது. பொலிஸார் இது தொடர்பாக இரு தரப்பாரிடமும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
(சதீஸ்)
(சதீஸ்)

