இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள நார்வே பிரதமர் ஏர்னா சொல்பேர்க் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
நார்வே பிரதமருக்கு அங்கு இராணுவ அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது.
மீன் ஏற்றுமதி, எரிசக்தி மற்றும் தொழில்நுட்பத்துறை உட்பட பல விடயங்கள் தொடர்பில் இரு நாடுகளுக்கிடையே உறவை வலுப்படுத்துவது குறித்து, இந்த சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதி ஊடக பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மக்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது தொடர்பில், அரசு முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு நார்வே பிரதமர் ஏர்னா சொல்பேர்க் தனது பாராட்டுக்களை தெரிவித்ததாகவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

