அமைச்சர்கள் பயணித்த ஹெலி அவசரமாக தரையிறக்கம்



(க.கிஷாந்தன்)

ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவர் பயணித்த தனியார் ஹெலிக்கொப்டர் ஒன்று, நுவரெலியாவிலுள்ள மரக்கறி விவசாய நிலமொன்றில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

அமைச்சர்களான நவீன் திஸாநாயக்க, சஜித் பிரேமதாஸ மற்றும் பிரதி அமைச்சர் இந்திக்க பண்டார ஆகியோரே குறித்த ஹெலிக்கொப்டரில் கொழும்பில் இருந்து நுவரெலியாவிற்கு பயணித்துள்ளனர்.

நுவரெலியாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொள்ளவே அவர்கள் இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.

இந்தநிலையில், நுவரெலியா – கடுமானவ பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, அந்த ஹெலிக்கொப்டரில் பயணித்த மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களும் பின்னர் பிறிதொரு வாகனத்தில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்