பாடசாலை மட்ட போட்டிக்கு போனால் கூட நீ தமிழனா?முஸ்லிமா? என்ற கேள்வி.



(Ch.சுஜா)
சர்வதேச   விளையாட்டுப் போட்டிகளில்  இலங்கை சாதிக்காமைக்கு  இனப் பாரபட்சமே காரணம் ! இதைப் பேரினவாதிகள் தங்கள் மனங்களிலிருந்து நீக்காத வரை ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கமும் இல்லை , வெங்கலப் பதக்கமும் கிடையாது மாறாக இரும்பு பதக்கந்தான் எடுக்க வேண்டும் . ஒலிம்பிக் போட்டியில் டங்கன் வைற் என்பவர்1948 ஆம் ஆண்டு 400மீற்றர் தடைகள ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கம் பெற்றார் .

ஒலிம்பிக் இன்னோரு பதக்கம் எடுக்க 50 வருடங்கள் கடந்தது. எவ்வளவோ முக்கித் தக்கி 100மீற்றர் போட்டியில் குறுந்தூர ஓட்ட வீராங்கனை ஒருவர்  வெங்கலப் பதக்கம் வென்றார். பின்பு அது வெள்ளிப் பதக்கமாக மாறியாது. ஆனால் இங்கு  ஒரு பாடசாலை மட்ட போட்டிக்கு போனால் கூட நீ தமிழனா?முஸ்லிமா? என்ற கேள்வி. சிறுபான்மை  சமுகம் சார்ந்தவார்களில் எவ்வளவு திறமையானவர்கள் உள்ளார்கள் . அவர்களது  திறமைகளுக்கு வாய்ப்புக்கள் வழங்கப்படுவாதில்லை. இது கேவலமான சிந்தனை . 

எத்தனையோ தமிழ் இளைஞர்கள்  யுவதிகள் நம் தாயகத்தை விட்டு அகதியாகப் போனவர்களுக்கு மேற்குலக நாடுகளில் சர்வதேசப் போட்டிகளில் விளையாடுவதற்கு வாய்ப்புகளும் வசதிகளும் வழங்கப்படுகின்றன. அதனால் அவர்கள் பொதுநலவாய விளையாட்டு தொடக்கம் பல சர்வதேச போட்டிகளில் பதக்கங்களை எம் தமிழ் இளைஞர்கள் யுவதிகள் பெற்றுக் கொடுக்கிறார்கள். அடிப்படையில் இனவாத ஈனச்சிந்தனை மாற வேண்டும் . நாமும் நமது    இளைஞர்  யுவதிகளுக்கு ஊக்கமும், ஆக்கமும் வழங்கி கௌரவிக்க வேண்டும். அடிமட்ட கேவலமான சிந்தனைகள் அகற்றப்பட வேண்டும். நம்பிக்கையை இளம் சமுதாயத்தின் மீது விதைக்க வேண்டும் . 

நம்பிக்கையே எமது பலம் அனைத்து இளைஞர் யுவதிகளும் ஏதோ ஒருவகையில் பலம் பொருந்தியவர்களே இவர்களின் சிந்தனையில் ஏற்ப்பட்டு மாற்றமே நாட்டின் அபிவிருத்திக்கு வழி வகுக்கும் என  மட்டக்களப்பு மாவட்ட தேசிய இளைஞர் மன்றம் நடாத்திய Talent Show நிகழ்வில் கலந்துகொண்ட கெளரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் சதாசிவம் வியாழேந்திரன் அவர்கள் கூறினார்.