டீசல் உற்பத்தி வரி அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும், டீசல் விலையில் அதிகரிப்பு ஏற்பட மாட்டாதென நிதியமைச்சு அறிக்கை விடுத்துள்ளது.
ஆகஸ்ட் மாம் 20 ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்பட்டுள்ள வரித் திருத்தத்தின் பிரகாரம், 3 ரூபாவாக காணப்பட்ட டீசல் உற்பத்தி வரி 13 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதால், அதன் நன்மையை அரசாங்கத்திற்குப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில் இந்த வரித் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

