ஆயிரக்கணக்கானோர் மெக்கா செல்ல விசா இன்றி தவிப்பு



கினியா நாட்டு தலைநகர் கொனாக்ரியில் ஆயிரக்கணக்கான மக்கள், ஹஜ் புனித பயணத்திற்கு மெக்கா செல்ல விசா கொடுக்கப்படாததால் தவிக்கின்றனர்.
மெக்கா செல்ல 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பதிவு செய்திருந்தாலும், எபோலா நோய் பரவும் அச்சத்தை தொடர்ந்து, அவர்கள் சௌதி அரேபியாவிற்கு செல்வதற்கு இரண்டு ஆண்டு தடை உள்ளது..
இந்த பயணத்திற்காக , அவர்கள் ஒவ்வொருவரும் கிட்டத்தட்ட 5,000 டாலர்களை செலுத்தியிருந்தார்கள்.
அடிப்படை தேவைக்கான பொருட்கள் இல்லாமல், பலர் ஒரு இஸ்லாமிய மையத்தில் தங்கியுள்ளார்கள். சிலர் நாட்டிலிருந்து புறப்பட்டுவிட்டார்கள். ஆனால் பலர் இன்னும் காத்திருக்கிறார்கள்.