வண்ண குறியீடு உரிய முறையில் காட்சிப்படுத்துக!




அனைத்து வகையான மென்பானங்களிலும் அடங்குகின்ற சக்கரையின் அளவு தொடர்பிலான வண்ண குறியீடுகள் உரிய முறையில் காட்சிப்படுத்தப்படுகின்றதா என்பது தொடர்பில் ஆராய, அடுத்து வரும் இரு வாரங்களுக்கு நாட்டிலுள்ள அனைத்து சிற்றூண்டிச் சாலைகளிலும் விஷேட பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் பாலித்த மஹிபால குறிப்பிட்டுள்ளார். 

இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். 

மேலும், இரண்டு நாட்கள் முழுவதும் பாடசாலைகளிலுள்ள சிற்றூண்டிச் சாலைகள் பரிசோதிக்கப்படவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

இதேவேளை, தூர இடங்களுக்கு செல்லும் பஸ் தரிப்பிடங்களிலுள்ள சிற்றூண்டிச் சாலைகள் குறித்து அதிக முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், அந்த உணவகங்களின் தரம் மற்றும் சுகாதாரம் தொடர்பில் இரு வாரங்களுக்கு ஒருமுறை பரிசோதிக்கும்படி, பொது சுகாதார பரிசோதகர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாகவும் பாலித்த மஹிபால குறிப்பிட்டுள்ளார்.