வரலாற்றில் முக்கிய இடம் பிடித்த மைத்திரி!



நாடாளுமன்றத்தில் இரங்கல் தெரிவிக்கும் பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றிய முதல் ஜனாதிபதி என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வரலாற்றில் இடம்பெற்றுள்ளார்.
காலஞ்சென்ற எம்.கே.ஏ.டி.எஸ். குணவர்தனவின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் யோசனை இன்று நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டதுடன் அதில் கலந்து கொண்டு ஜனாதிபதி உரையாற்றினார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தாம் இருவரும் அரசாங்கத்தில் இருந்து வெளியேறியதாகவும் தனது வெற்றிக்காக குணவர்தன பாரிய அர்ப்பணிப்புகளை மேற்கொண்டதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.